அநாகரீகமாக அத்துமீறும் அசீம்! ஆக்ரோஷமான ATK

211
Advertisement

பிக் பாஸ் ஆறாம் சீசன் தொடங்கியதோ இல்லையோ, அசீமின் crime rate ஏறிக் கொண்டே தான் போகிறது.

ஷிவின் உடல்மொழியை கிண்டல் செய்தது, ஷிவினுக்கு மொட்டை அடிச்சு விட்ரனும் என கமெண்ட் செய்தது, எச்சில் துப்பி கொடுக்கிறேன் சாப்பிடுறியா என விக்ரமனிடம் வம்பிழுத்தது, மற்றும் பல சம்பவங்களில் அத்துமீறும் அநாகரீக நடவடிக்கைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார் அசீம்.

இந்நிலையில், அசீமுக்கு நண்பராக இருந்த ஒரே ஒருவரிடமும் சண்டை எல்லை மீறி சென்றுள்ளது. முன்னதாக ATK, காமெடியாக சொன்ன விஷயத்தை அசீம் சீரியசாக மாற்ற முயற்சிக்கவே அவரிடம் பேச மாட்டேன் என கூறி விட்டார் ATK. இந்நிலையில், டாஸ்கின் நடுவே மீண்டும் அசீம்.

ATKவை வம்பிழுக்கவே, கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்ட ATK கெட்ட வார்த்தைகளை பேசி திட்டும் ப்ரோமோ வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய வரம்பு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடும் போட்டியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.