தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி ‘ லாக் எஃப்டி ‘ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட்டை டிஜிட்டல் தளம் மூலம் முன்கூட்டியே மூடுவதைத் தடுக்க அனுமதிக்கிறது. வளர்ந்து வரும் சைபர் மோசடி அபாயத்தைக் தடுக்கும் நோக்கமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது.
‘லாக் எஃப்டி’ வசதியை ஆக்சிஸ் வங்கியின் மொபைல் செயலி மூலமாகவோ அல்லது ஆக்சிஸ் வங்கிக் கிளையைப் பார்வையிடுவதன் மூலமாகவோ செயல்படுத்தலாம். மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் அம்சங்களைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்வதைத் தடுக்க இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூத்த குடிமக்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பை மேம்படுத்த ஆக்சிஸ் வங்கி எடுத்த பல நடவடிக்கைகளுக்குப் பிறகு ‘லாக் எஃப்டி’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.