பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) பெங்களூருவில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அதனையடுத்து தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். மேலும் அவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவி வாங்கியுள்ள விருதுகள்
1969ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
1992ம் ஆண்டு ‘பத்மபூஷன் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
1965-ம் ஆண்டு கர்நாடக அரசு ‘அபிநய சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.
1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ‘தமிழ்நாடு அரசு சினிமா விருது’ ‘குலவிளக்கு’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
1980ம் ஆண்டு ‘அபிநந்தனா – காஞ்சன மாலா’ விருது கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
1988ம் ஆண்டு ‘ராஜ்யோத்சவ விருது’ கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு தமிழ் நாடு அரசு ‘எம் ஜி ஆர் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
1994ம் ஆண்டு தென்னகத்திற்கான ‘ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
1997ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2001ம் ஆண்டு ஆந்திர அரசு ‘என் டி ஆர் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
2006ம் ஆண்டு பெங்களுரு யுனிவர்சிட்டி ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கவுரவித்தது.
2008ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்
2009ம் ஆண்டு ஆந்திர அரசு ‘என் டி ஆர் விருது’ இரண்டாம் முறையாக வழங்கி கவுரவித்தது.
2009ம் ஆண்டு ‘டாக்டர் ராஜ்குமார் விருது’ கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2010ம் ஆண்டு ‘கலைமாமணி விருது’ தமிழக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.