மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. காளைகளுக்கு, மருத்துவப் பரிசோதனை முடிந்து, வாடி வாசலுக்கு உள்ளே நுழையும் பகுதி வரை 10 அடி உயரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை பிடிக்கும், வீரருக்கு வழங்கவுள்ள 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு வழங்கப்படவுள்ள 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் ஆகியவை மேடையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு முதல் முறையாக போட்டிகளில் எல்.இ.டி., திரைகள் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் ஸ்கோர் போர்டு’ அமைக்கப்பட உள்ளது.
