Thursday, December 26, 2024

தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரி சைக்கிள் கண்டுப்பிடிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் கோட்ட நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார்  .மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் தனுஷ் குமார், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த ஆண்டில் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், புதிய முயற்சியாக ரீ-சார்ஜபில் இ -பைக் (Rechargeable E-bike) என்ற புதிய சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். கார்களுக்கு பயன்படுத்தப்படும் 24V ஆல்டர்னேட்டர், பேட்டரி மற்றும் சிறிய மோட்டார் கொண்டு இந்த புதிய சைக்கிளை  உருவாக்கியுள்ளார் . வழக்கமாக சைக்கிள் ஓட்டும்போது சைக்கிள் பெடல் பகுதியிலிருந்து செல்லும் செயின் பின் சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய வகை இ-பைக்கில் ஆல்டரனேட்டருடன் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனுஷ் குமார் பேசும்போது, ”சைக்கிளில் ஒருவர் ஓட்டி செல்லும் பொழுது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி தானாகவே சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். 20 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்” என்றார். தனுஷ் குமாருக்கு இந்த சைக்கிளைத் தயாரிக்க 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது என்று கூறுகிறார்.

Latest news