தாம்பரம் ரயில்நிலையத்தில் கீழே கிடந்த 9 சவரன் தங்க நகையை மீட்டு, போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தாம்பரம், ரங்கநாதபுரம், காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஆட்டோ ஓட்டுநரான இவர், வீட்டில் இருந்த பெட்சீட் ஒன்றை தனது ஆட்டோவில் வைத்துள்ளார். அதில் சாகுல் ஹமீது மகளின் 9 சவரன் தங்க செயின் இருந்துள்ளது. இதனை அவர் கவனிக்காமல் கொண்டு சென்ற நிலையில், அது தாம்பரம் ரயில்நிலையத்தில் அருகே தவறி விழுந்துள்ளது.
இந்த நிலையில், மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான கோடீஸ்வரன் என்பவர், தங்க நகையை மீட்டு அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் செயின் காணாமல் போனதை குறித்து அவரது மகள் தகவல் தெரிவித்த நிலையில், சாகுல் ஹமீது காவல்நிலையத்திற்கு சென்று நகையை பெற்று கொண்டார்.