Saturday, December 20, 2025

சமூக வலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க ஆஸ்திரேலிய அரசு உத்தரவு

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது.

இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுவதால் அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Related News

Latest News