எவ்வளவு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கினாலும்
எரிபொருள் என வரும்போது அனைத்து வாகன
உரிமையாளர்களும் சிக்கனத்தையே கடைப்பிடிக்க
விரும்புகின்றனர்.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும்,
பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகை காற்று
மாசுக்கு காரணமாக அமைவதாலும் மின்சார
வாகனங்களுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் என பேட்டரியால்
இயக்கப்படும் வாகனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
அந்த வகையில் ஆடிக் கார் நிறுவனமும் எலக்ட்ரிக் காரை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு இந்நிறுவனத்தின்
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பேட்டரிமூலம் இயங்கும் இந்தக் காரின் பேட்டரியை
அரை மணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் ஏற்றிவிடலாம்.
முழுவதும் சார்ஜ் ஆக வேண்டுமானால் எட்டரை மணி
நேரம் ஆகும்.
முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்டால் 484 கிலோமீட்டர்
தொலைவு பயணிக்கலாம். மணிக்கு 200 கிலோமீட்டர்
வேகத்தில் இந்தக் காரில் பறக்கலாம்.
ஜெர்மன் நிறுவனமான போக்ஸ்வேகன் நிறுவனத்தின்
தயாரிப்பான ஆடிக் கார் உலகம் முழுவதும் பிரபலமானது.
ஆடி என்பது இந்நிறுவனத்தின் நிறுவனரான ஆகஸ்ட்
ஹார்ச்சின் குடும்பப் பெயர்.
ஆடி என்பதற்கு ஜெர்மனிய மொழியில் கவனி என அர்த்தம்.
இந்த வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகக்
கூறப்படுகிறது.
இந்த ஆடிஇ டிரான் எலக்ட்ரிக் காரின் விலை
தோராயமாக ஒரு கோடி ரூபாய்தான். இந்த விலையும்
ஷோரூமுக்கு முந்தைய விலைதான். சொகுசுக் கார்ன்னா
சும்மாவா? கொஞ்சம் இந்த எலக்ட்ரிக் ஆடிக் காரையும்
கவனியுங்களேன்…
