பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ் பா.ம.க தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி, அவருடைய மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க செயல் தலைவராக அறிவித்தார்.
நேற்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வடுகம்பட்டி பகுதியில் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ. அருள் பயணித்த காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கியதால், இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. இருதரப்பும் கட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
