பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் கடந்த சில நாட்களுக்குமுன் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் தூதரகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய இங்கிலாந்து வாழ் இந்தியரான அங்கித் (வயது 41) என்பவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.