ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, கணக்கு விபரம் (ஸ்டேட்மென்ட்) பார்வையிடல் போன்ற சேவைகள் பெருநகரங்களில் மாதத்திற்கு 3 முறையும், பிற நகரங்களில் 5 முறையும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன.
அதற்கு மேல் ஏ.டி.எம். பயன்படுத்தினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படும். இதுவரை இந்த கட்டணம் ரூ.21 இருந்தது. ஆனால், இன்று (மே 1) முதல் இது ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் உள்ள இருப்பை தெரிந்துகொள்ளும் நோக்கில் ஏ.டி.எம். மூலமாக சோதனை செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது அந்த கட்டணம் ரூ.6 லிருந்து ரூ.7 ஆக உயர்ந்துள்ளது.