நடப்பு IPL தொடரில் ஏறக்குறைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Play Off வாய்ப்பினை இழந்து விட்டது என்றே தோன்றுகிறது. ருதுராஜ்க்கு பதிலாக தோனியை கேப்டனாக கொண்டு வந்தும்கூட, CSKவின் சரிவினை தடுக்க முடியவில்லை.
இதற்கு இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது, பவர்ஹிட்டர்களை ஏலத்தில் எடுக்காதது உட்பட ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இதனால் சொந்த ரசிகர்களே வெந்து நொந்து போய் உள்ளனர். இந்தநிலையில் அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வினை, முன்னாள் வீரர் முஹமது கைஃப் மட்டம் தட்டி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கைஃப், ”மும்பை அணியின் வில் ஜாக்ஸ் அபாரமாக பந்து வீசி, SRH அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் கூட இந்தளவு பந்தை Spin செய்திருக்க மாட்டார்,” என்று பேசியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் பார்ட் டைம் பவுலர் தான். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு, மும்பை அணியைக் கரை சேர்த்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.
நடப்பு தொடரில் அஸ்வின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்று, CSK அவரை பெஞ்சில் அமர வைத்திருக்கிறது. நிலைமை இப்படியிருக்க அஸ்வின் போன்ற முன்னணி பவுலரை, பார்ட் டைம் வெளிநாட்டு பவுலருடன் ஒப்பிட்டு கைஃப் பேசியது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்துள்ளது.