Friday, December 26, 2025

தலைவரான எனக்கே முழு அதிகாரம் உண்டு – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட செயலாளர்களை அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

பா.ம.க.வில் சில குழப்பங்கள் நிலவுகின்றன. அவை விரைவில் சரியாகும். நமக்கான கொள்கைகளை வகுத்தவர் அய்யா ராமதாஸ், அவர் வழியில் நாம் நடக்க வேண்டும். பா.ம.க.வில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உண்டு. நிறுவனருக்கு அல்ல.

இப்போது தான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன். தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது. இதுபோன்று காலங்கள் வந்துபோகும்… விரைவில் எல்லாம் சரியாகும் என்றார்.

Related News

Latest News