டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்த சிபிஐ வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்ததாக சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமனறம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதார். பின்னர் கடின உழைப்பின் மூலமும் நேர்மையின் மூலமாகவே மக்கள் நம்பிக்கையைச் சம்பாதித்ததற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத் தீர்ப்பு தான் நான் நிரபராதி என்பதற்கு ஆதாரம். உண்மை வெல்லும் என அவர் கூறினார்.
