டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் தங்கச்சங்கிலிகளை பாஜக கொடுத்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர்களுக்கு பாஜக சேலைகள், பணம் மற்றும் தங்கச்சங்கிலி கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். ஆனாலும் டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.