Monday, June 9, 2025

தவெக – வில் இணைந்த அருண்ராஜூக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தவெக வில் ராஜலட்சுமி, டேவிட் செல்வன், ஸ்ரீதரன், சுபாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்

இவர். எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க. கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news