நாம் தமிழா் கட்சியினர் சமூக ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் சித்தரித்து கருத்துகள் பதிவிடுவதாக டிஐஜி வருண்குமாா் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்நிலையில் ”இன்று மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறக்கப்படும்” என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.