Saturday, May 10, 2025

திடீரென உயர்ந்த பாலின் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் அரசின் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் விற்பனை செய்து வருகிறது. இதேபோல், பல்வேறு தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆரோக்கியா நிறுவனம் தனது ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி 71 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. அரை லிட்டர் பாக்கெட் விலை, 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பால் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest news