தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர் மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா அப்பா போலவே நடிப்பில் ஆர்வம் கொண்டு, திரைப்படங்களில் நடித்தார்.
கடந்தாண்டு நடிகர் உமாபதியை ஐஸ்வர்யா கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. இந்தநிலையில் மீண்டும் அர்ஜுன் வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கவிருக்கிறது. இளைய மகள் அஞ்சனாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.
நடிப்பின் மீது ஆர்வம் இல்லாத அஞ்சனா Handbag நிறுவனம் ஒன்றை, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த, காதலரின் திருமண புரோபோசலை ஏற்றுக் கொண்டேன்,” என்று, பதிவிட்டு நிச்சயதார்த்தத்தை அறிவித்து இருக்கிறார்.
காதலர் குறித்த விவரங்களை அஞ்சனா தெரிவிக்கவில்லை. விரைவில் அவரின் திருமண தேதி குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.