Saturday, May 10, 2025

பாஜகவின் கைக்கூலியாக சீமான் மாறிவிட்டார் : கட்சியிலிருந்து விலகிய செயலாளர் பேட்டி

சங்பரிவார் அமைப்பின் ஆலோசனை பேரில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பிற்கு பிறகு பாஜகவின் கைக்கூலியாக சீமான் மாறியதால் கட்சியிலிருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் நீல மகாலிங்கம். நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மண்டல செயலாளராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில், சங்பரிவார் அமைப்பின் ஆலோசனையின் பேரில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்ததாகவும், இதன் பிறகு பாஜகவின் கைக்கூலியாக சீமான் மாறி விட்டதாக கூறி கட்சியிலிருந்து விலகியிருக்கும் நீல மகாலிங்கம், தன்னுடன் சேர்ந்து 70க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்துள்ளார்.

Latest news