சீர்காழியில் மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா ஆகிய இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ராஜா, கண்ணனை கட்டையால் அடித்ததில் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெற்று வந்தார்.
சிகிச்சையில் இருந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
