Friday, January 30, 2026

ரியல்மி போன் வாங்கப்போறீங்களா? ரூ.4,000 விலை குறைப்பு, இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

இந்திய சந்தையில் ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக, ரியல்மியின் முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.4,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி மாடலின் முதன்மை சந்தை விலை ரூ.26,999 ஆக உள்ளது. ஆனால், தற்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக ரூ.4,000 விலை குறைப்பு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.1,150 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,849 விலையில் வாங்க முடியும்.

ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (4nm) சிப்செட்டுடன் வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மற்றும் ரியல்மி யுஐ 6.0 வழங்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு 2 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், 3 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அளவிலான அமோலெட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 2800 x 1272 பிக்சல் தீர்மானம், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும், 3840Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகிய அம்சங்களும் உள்ளன. டிஸ்பிளே பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா அம்சங்களைப் பொருத்தவரை, இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முதன்மை கேமராவில் சோனி IMX896 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதி உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்காக 16 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சோனி IMX480 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும், IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்குகளுடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவும் இதில் உள்ளன.

Related News

Latest News