பருவமாற்றத்தின் போது காய்ச்சல் மற்றும் சளி போன்ற பருவகால நோய்கள் எளிதில் தொற்றுகொள்ளும். காய்ச்சல் வந்தால் உடல் சோர்வடைந்து, வாயில் கசப்பு ஏற்பட்டு உணவு சாப்பிட விருப்பம் இல்லாமல் போகும்.
காய்ச்சல் நேரத்தில் சூடான காபி குடித்தால் குணமாகும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், காய்ச்சலின் போது காபி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க : குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்
காய்ச்சல் என்பது உடல் உள்ளே வந்த தொற்றை எதிர்த்து போராடும் ஒரு வெப்பமான அறிகுறி. இந்த போராட்டத்திற்கு அதிக ஆற்றல் மற்றும் முழுமையான ஓய்வு அவசியம். ஆனால் காபியில் உள்ள ‘காஃபைன்’ நரம்பு மண்டலத்தை தூண்டி, மூளை விழிப்பதை வலுப்படுத்துகிறது. இதனால் உடல் சோர்வாக இருந்தாலும், ஓய்வு எடுக்க முடியாமல், உடலின் குணமடையும் செயல்முறையை தாமதம் ஆக்குகிறது.
காய்ச்சலின் போது அதிக வியர்வை வழியாக உடல் நீர்ச்சத்தை இழக்கும். அப்போது நீரைச் சரியாக உட்கொள்ள வேண்டும். ஆனால் காபி ஒரு ‘டையூரிடிக்’ பானமாக இருப்பதால் சிறுநீரில் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் நீரிழப்புக்கு உள்ளாகி, தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
காய்ச்சலின் போது செய்ய வேண்டியவை
- வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் குடிக்கவும்.
- காய்கறி சூப், அரிசிக் கஞ்சி போன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.
- போதுமான ஓய்வும் உறக்கமும் கொடுப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக்கவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- காபி போன்ற ஊக்க மிக்க பானங்கள்.
- பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், ஏனெனில் அவை சளி அடர்த்தியை அதிகரிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)