Saturday, July 12, 2025

அமெரிக்காவுக்கு போறீங்களா? விசா எடுக்க இவ்வளவு செலவாகுமா? டிரம்ப் போட்ட புது ரூல்ஸ்!?

அமெரிக்கா போக பிளான் பண்ணுறீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு important update இருக்கு. அடுத்த வருஷம் முதல், யாராவது அமெரிக்கா விசா apply பண்ணனும்னா, கூடுதலா $250 டாலர் கட்டணமா கொடுக்கணும். இந்திய ரூபாய்ல பாத்தா, சுமாரா ரூ. 21,000க்கு மேல ஆகும்.

இந்த கட்டணத்துக்கு பேர் Visa Integrity Fee. இது விசா ப்ராசஸ்ல குடுக்குற மொத்த கட்டணத்தோட சேருதுன்னா, overall செலவு ரொம்பவே அதிகமா போயிடும்.இப்போ B1/B2 சுற்றுலா விசா, F1 மாணவர்கள் விசா, H1B வேலைக்கான விசா, J1 பரிமாற்ற விசா… எல்லாத்துக்குமே இந்த புதிய கட்டணத்தோட direct impact இருக்கும்.

இந்த கட்டணத்தை யாரு கொண்டு வந்தார்னு கேட்டீங்கனா… டொனால்ட் டிரம்ப் தான்! “One Beautiful Bill”ன்னு பேர்ல ஒரு சட்டம் கொண்டு வந்தாரு. அதுக்குள்ளதான் இந்த $250 சேர்க்கப்பட்டது. இந்த பணத்த உங்க விசா approve ஆகுற நேரத்துல அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) collect பண்ணப்போறாங்க.

இந்த கட்டணம் ஏன் வைச்சிருக்காங்கன்னு பாத்தீங்கனா — சிலர் விசா முடிஞ்சதும், அங்கயே தங்கிட்டு, விதிகளை மீறி வேலை பாக்குறாங்க. அதுக்காக எல்லாரும் சட்டத்தை பின்பற்றணும், கண்டிப்பா timing-க்கு கிளம்பணும், அப்படின்னு ஒரு type-ல “விசா நேர்மையை” encourage பண்ணுறதுக்காக இந்த கட்டணத்தை வைத்திருக்காங்கன்னு சொல்லுறாங்க.

ஆனா இதுல ஒரு positive side-ம் இருக்கு… நீங்க விசா விதிகளை follow பண்ணீங்கனா, எந்த தவறும் செய்யாம, நேரத்துக்கு கிளம்பிட்டீங்கனா — அந்த $250 திரும்ப வாங்கிக்கிற eligibility உங்களுக்கு இருக்கும்!

ஆனா பாருங்க, இந்திய பயணிகளுக்கு – தெளிவா சொன்னா சுற்றுலா போறவங்களா இருக்கட்டும், லாஸ் ஏஞ்சலஸ் யூனிவர்சிட்டில படிக்கணும் னு கனவு காண்ற மாணவர்களா இருக்கட்டும் – இப்போ அமெரிக்கா விசா செலவு ரொம்ப ஜாஸ்தியா ஆகப்போகுது. இப்பவே B1/B2 விசா க்கு $185 டாலர் கட்டணமா இருக்குது. அதுக்கு மேல இந்த $250 நேர்மை கட்டணமும் சேரும்.

அதைத் தவிர,அதுக்கு மேல ஒரு $24-டாலருக்கான I-94ன்னு ஒரு குட்டி கட்டணமும் இருக்கு. அதுக்கப்புறம் சில பயணிகளுக்கா, அவர்களோட பயண வகையைப் பொறுத்து, $13 முதல் $30 வரை கூடுதலா கட்டணமும் சேரும். இதையெல்லாம் சேர்த்து பாத்தீங்கன்னா, ஒரு விசா எடுத்துக்கறதுக்கே சுமாரா ₹40,000 க்கும் மேல செலவாகும்! இன்னும் ESTA, EVUS மாதிரி systems-ல தனியா charges வர வாய்ப்பு இருக்கு.

Flight, hotel, shopping எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… இப்போ விசா எடுக்குறதே biggest challenge மாதிரி ஆகிடுச்சு.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் — இந்த $250 டாலர் கட்டணம் ஒரு fixed rate இல்ல. ஒவ்வொரு வருஷமும் பணவீக்கத்துக்கு ஏத்த மாதிரி அதை adjust பண்ணப்போறாங்க. So, future-ல இது இன்னும் costly ஆகும் chances இருக்கு.

so மொத்தத்துல சொன்னா, நீங்க அமெரிக்கா போக பிளான் பண்ணுறீங்கனா… இந்த புதிய கட்டணங்களையும் உங்கள் பட்ஜெட்டுல இப்போவே சேர்த்துக்குங்க. Planning தான் safe side!”

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news