Thursday, May 8, 2025

உங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கிறீர்களா ?? அப்போ ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவைகளில் பிஸ்கடும் ஒன்று.. அது மட்டுமின்றி மிகவும் பசியான நேரத்தில் கூட நம்மில் பலர் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.. பிஸ்கட் என்பது மாவை வைத்து சுட்ட உணவுப் பண்டம் ஆகும். பிஸ்கட்கள் பொதுவாக இனிப்பாகவோ அல்லது காரமாகவோ இருக்கும். பிஸ்கட் பல வகைகளில் செய்யப்படுகிறது, உதாரணமாக, நெய் பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட், ஓட்ஸ் பிஸ்கட், எள்ளு பிஸ்கட், கோதுமை பிஸ்கட், கார்ன் ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் பிஸ்கட் என பல வகைகள் உள்ளது…

பிஸ்கட்களை தினமும் சாப்பிட கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்..

அதாவது பிஸ்கட்களில் பசையம் இருப்பதால் இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும். அதுபோல ஓட்ஸ் அல்லது மல்டி கிரைன் பிஸ்கட் அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்கின்றனர்.

பிஸ்கட்டுகளில் இருக்கும் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பால் முகப்பருக்கள், சருமத்தில் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகளவு காணப்படுகிறது.பிஸ்கட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும், இதனால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும்

தினமும் இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். இதனால் தொற்றுகள் மற்றும் நோய்களின் அபாயத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுகின்றனர்.அது மட்டுமின்றி பிஸ்கட்டுகளில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

இதனோடு பிஸ்கட்டில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, குறைந்த நார்ச்சத்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.பிஸ்கட்டுகளில் அதிக அளவு சோடியம் இருப்பதால், தைராய்டு மற்றும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை அறவே தவிர்த்து கொள்ள வேண்டும்.
எனவே, பிஸ்கட்களை மிதமாக சாப்பிடுவது நல்லது..

குறிப்பு; இவை எல்லாம் பொதுவான தகவலின் அடிப்படையாக கொண்டுள்ளது..

Latest news