Monday, April 28, 2025

‘passport’ அப்ளை பண்ணுறீங்களா ? இப்படி செய்யுங்க ! உங்க வீட்டுக்கே வரும் !!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிமையானதாக மாறிவிட்டது. முன்புபோல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. தற்போது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சில கிளிக்குகளில் வேலை முடிந்துவிடும்.

முதலில், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் இணையதளமான passportindia.gov.in-ல் சென்று புதிய பயனராக பதிவு செய்ய வேண்டும். அங்கு உங்கள் அடிப்படை தகவல்களை பதிவு செய்து கணக்கை உருவாக்கலாம்.

பதிவை முடித்த பிறகு, உள்நுழைந்து “Apply for Fresh Passport or Re-issue” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பப் படிவத்தில் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை தெளிவாக நிரப்ப வேண்டும்.

படிவத்தை சமர்ப்பித்தவுடன், அப்பாயிண்ட்மெண்ட் தேதி தேர்வு செய்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். கட்டணம் செலுத்தியதும், விண்ணப்பக் குறிப்பு எண் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட் ரசீது கிடைக்கும்.

அப்பாயிண்ட்மெண்ட் நாளன்று, அசல் ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் பாஸ்போர்ட் சேவா நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு பயோமெட்ரிக் மற்றும் ஆவண சரிபார்ப்பு நடைபெறும். அதன் பின்னர் போலீஸ் சரிபார்ப்பு வரும்.

சரிபார்ப்பு முடிந்ததும், பாஸ்போர்ட் உங்கள் வீட்டுக்கே ஸ்பீட்போஸ்ட் மூலம் அனுப்பப்படும். சாதாரண முறையில் 30–45 நாட்கள் ஆகும். தட்கல் முறையில் 7 நாட்களுக்குள்ளேயே கிடைக்கும்.

Latest news