Friday, October 10, 2025

நீங்கள் வலி நிவாரண தைலத்திற்கு அடிமையா? என்னென்ன பின்விளைவுகள் வரலாம்?

தலைவலி, சளி, மூட்டுவலி, சோர்வு போன்றவற்றுக்கு பலர் உடனடி நிவாரணமாக pain relief balm-களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதனை அடிக்கடி, அதிகமாகப் பயன்படுத்துவது அடிமைத்தனமாக மாறும் அபாயம் உள்ளது.

இந்த வகை தைலங்களில் menthol, camphor போன்ற வலிமையான ரசாயனங்கள் உள்ளன. இவை நரம்புகளைத் தூண்டி, சில நிமிடங்களுக்கு குளிர்ச்சி மற்றும் நிவாரண உணர்வைத் தரும். ஆனால் வலிக்கான உண்மையான காரணத்தை குணப்படுத்துவதில்லை.

மிக அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம். தோல் எரிச்சல், சிவப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். மூக்கின் வழியே தொடர்ந்து தைலத்தின் மணத்தை சுவாசிப்பதால் தலைச்சுற்றல், சுவாசக்குழாய் பிரச்சனை உண்டாக வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களுக்கு அருகில் பயன்படுத்தினால் கண் எரிச்சல், நீர் வடிதல் ஏற்படலாம்.

அடிக்கடி பயன்படுத்தும் பழக்கம், psychological dependence ஆக மாறி, சிறிய வலிக்கும் உடனே இதையே தேட வைக்கும் நிலை ஏற்படலாம்.

மருத்துவர்கள் கூறுவதாவது, இவ்வகை balm-களை அதிகப்படியான நம்பிக்கையுடன் அடிக்கடி பயன்படுத்துவது தவறு. அடிக்கடி தலைவலி, மூட்டுவலி இருந்தால், அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.

அதனால், pain relief balm தற்காலிக நிவாரணம் தரும். ஆனால் அதை பழக்கமாக்கிக் கொள்வது உடல்நலத்திற்கு பாதகமாகும். மிதமான பயன்பாடே பாதுகாப்பானது என்பதே நிபுணர்களின் எச்சரிக்கை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News