அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் ஓய்வு கால நிதி பாதுகாப்பை மிக முக்கியமாக கருதுகின்றனர். இதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில் முக்கியமானவை பி.எஃப் (Provident Fund) மற்றும் எல்.ஐ.சி (Life Insurance Corporation of India) ஆகும். இப்போது இந்த இரண்டையும் ஒரே முறையில் பயன்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.
எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக பாலிசிகளுக்கான பிரீமியத்தை நேரத்துக்கு முந்தியாக கொடுக்க முடியாமல் போகிறார்கள். இந்நிலையில் பி.எஃப் கணக்கை எல்.ஐ.சி பாலிசியுடன் இணைத்தால் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
பி.எஃப் கணக்குடன் எல்.ஐ.சி இணைந்தால், EDLI (Employees Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் பணியாளருக்கான காப்பீட்டு பாதுகாப்பு உண்டு. பணியாளர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு 2.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை நிதி வழங்கப்படும். இதனால் நிதி பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கும்.
எல்.ஐ.சி பாலிசிகளுக்கான பிரீமியம் செலுத்தாத நிலை ஏற்பட்டாலும் அந்த தொகை நேரடியாக பி.எஃப் கணக்கிலிருந்து விலக்கப்படும். ஆகவே, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் பிரீமியம் செலுத்த மறக்க கவலைப்பட தேவையில்லை.
LIC மற்றும் PF இல் ஒரே Nominee பதிவு செய்ய வேண்டும். எனவே Claim செய்யும் போது சிக்கல் இருக்காது. குடும்பத்தினருக்கு நிதி எளிதில் வழங்கப்படும்.
EPF இருப்பு குறைவாக இருந்தால், பாலிசி காலாவதியாகும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த சலுகையை பயன்படுத்துவதற்கு முன் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
