Monday, December 29, 2025

சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைகிறதா? – தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கடந்த 19ம் தேதி ஏசி மின்சார ரயில்சேவை தொடங்கியது. பயணிகள் தங்களின் கருத்தை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் மூலம் அனுப்பலாம் என தெற்கு ரயில்வே அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதில் பயண கட்டணத்தை குறைக்க வேண்டும், ரயில் இயக்க நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏசி மின்சார ரயிலுக்காக கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 10 கி.மீ. தொலைவிற்கு 35 ரூபாயும், அதிகபட்சமாக 150 ரூபாய் என்ற கட்டண முறையே தொடரும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News