தீபாவளி என்றாலே, பலருக்கும் நினைவில் முதலில் வருவது பட்டாசுதான். நம்மில் பெரும்பாலோர், இந்த வெடிகள் இல்லாமல் தீபாவளி என்பது முழுமையாக இருக்காது. ஆனால், பட்டாசுகள் வெடிக்கும்போது வெளியேறும் புகை மற்றும் மாசுகள், சிலருக்கு கண்ணெரிச்சல், சுவாசக் குறைபாடுகள் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
இதை கருத்தில் கொண்டு, சிலர் பசுமை பட்டாசுகளை (Green Crackers) பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் பசுமை பட்டாசுகள் பாதுகாப்பானதா? சுவாச நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை என்ன என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மூத்த மருத்துவர் சாட்டர்ஜி, இந்த பசுமை பட்டாசுகளின் நன்மை என்பது, இவை பிற பட்டாசுகளை விட 30 சதவிகிதம் குறைவான மாசை வெளிப்படுத்துகிறது மட்டுமே. மற்றபடி மாசே இருக்காது என்று எதுவும் இல்லை. பட்டாசுகளால் ஏற்படும் உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும் என்பதால் சுவாசப்பிரச்னை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
“வெடி அதிகம் வெடிக்கப்படும் நேரங்களில் சுவாசப் பிரச்னை இருப்போர், இதயப் பிரச்னை இருப்போர், பிற நோயாளிகள் வெளியில் வராமல் இருத்தல் நலம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், பட்டாசு வெடிப்பவர்களும் கவனத்துடன், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்கவும்” என்கின்றனர்.
