Tuesday, April 1, 2025

தங்கம், வெள்ளியெல்லாம் சுத்த வேஸ்ட்டா? என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர்?

“தங்கம் விலை இப்படி நாளுக்கு நாள் விறுவிறுன்னு ஏறுதே.. அப்போ வெள்ளியில் முதலீடு செய்யலாமா? அப்படித்தான் வாரன் பபெட் என்ற ஒருவர் நல்ல லாபம் பார்த்தாராமே..” என்று சிலர் வெள்ளியை நோக்கி படையெடுக்கலாமா என்று Plan போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த வாரம் சற்றே குறைந்து ஆறுதல் கொடுத்த தங்கம் மீண்டும் கடந்த சில நாட்களாக Top Gear போட்டு உயர்ந்து வருகிறது. சரி அப்படி வெள்ளியில் முதலீடு செய்தால் என்னவாகும்? லாபகரமாக இருக்குமா என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

கடந்த ஒரு 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.150 வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8290க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.8340க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தான் இப்படி என்றால் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.114க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் ஆனந்த் சீனிவாசன் இதை பற்றி தனது யூடியூப் பக்கத்தில், “என்னைப் பொறுத்தவரைத் தங்கத்தைச் சேமிப்பாக வாங்கி வைப்பது மட்டுமே சிறந்தது. வெள்ளியைப் பொறுத்தவரை அதில் ஏற்ற இறக்கம் பெரிதாக இருக்கும். மேலும், அதற்கு செய்கூலி அதிகம், சேமித்து வைப்பதும் கடினம்.

மருத்து செலவு, குழந்தையின் பள்ளி கட்டணம், கல்லூரி கட்டணம் என எதுவாக இருந்தாலும் தங்கம் கையில் இருந்தால் அதை அடகு வைத்து உடனே பணத்தைப் புரட்டலாம்” என்றார். மேலும் அவர் “சிலர் வாரன் பபெட் தங்கத்தை விட்டுவிட்டு வெள்ளியில் முதலீடு செய்து காசு பார்த்ததாக சொல்வார்கள். ஆனால், அது வேறு காலம். 1970களில் ஹண்ட் Brother காலத்தில் வாரன் பபெட் இதைச் செய்தார். அப்போது சந்தையில் வெள்ளிக்கான தேவை இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு காசு பார்த்தார். ஆனால், அவரை பொறுத்தவரைத் தங்கம், வெள்ளி இரண்டுக்கும் ஒரே லாஜிக். அதாவது இரண்டுமே ஒரு சொத்து. அதை லாக்கரில் வைத்து நான் தான் செலவு செய்ய முடியும். அதில் இருந்து பணம் வராது. இதனால் இரண்டுமே வேஸ்ட் என்பதே வாரன் பபெட் கருத்து.

“அமெரிக்காவில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் முதல்முறையாக 3100 டாலரை தாண்டியுள்ளது. கரண்ட் மார்க்கெட்டில் 3065 டாலர் வரை சென்றது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போது நமது நாட்டில் விற்கும் தங்க விலையுடன் 6% சேர்த்தால் கிட்டதட்ட ரூ.9000 வந்துவிடும். அதாவது காயினாக வாங்கினாலும் 3% வரை சார்ஜ்ஐஸ் கட்ட வேண்டும். அதுபோக 3% GST இருக்கிறது.

24 கேரட் தங்கம் ஏற்கனவே ரூ.9000 தாண்டிவிட்டது. கூடிய சீக்கிரம் அது ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிவிடும். 22 கேரட்டும் அதன் பின்னர் உடனே ரூ.10,000 தாண்டிவிடும். தங்கம் விலை அதிகரிக்க இருக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது. எனவே, தங்கம் விலை குறைவதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.

Latest news