ஜோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ செயலி, வாட்ஸ்அப்புக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கியது. இது ஆரம்பத்தில் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ மற்றும் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு வெற்றிபெற்றது. ஆரம்பத்தில் சில சிக்கல்களை சந்தித்தாலும், நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தி வந்தது.
அரட்டை செயலி, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், தற்போது முதல் 100 செயலிகள் பட்டியலை விட்டு வெளியேறிவிட்டது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் அரட்டை செயலி 105-வது இடத்திலும், ஆப் ஸ்டோரில் 123-வது இடத்திலும் வந்துவிட்டது.
‘அரட்டை’ செயலி பயனர்களின் தகவல்களை இந்தியாவில் மட்டுமே பாதுகாக்கிறது. மேலும் வாய்ஸ், வீடியோ கால்கள் பாதுகாப்பானவை எனக் கூறுகிறது. ஆனால் சாதாரண மெசேஜ்களின் ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ வசதி இன்னும் முழுமையாக இல்லை. இது வாட்ஸ்அப்பில் இருக்கும் முக்கிய பாதுகாப்பு அம்சம் உடனடியாக முறைப்படுத்தப்பட வேண்டும் என்று நிறுவனம் சொல்கிறது.
இந்திய சந்தையில் வாட்ஸ்அப்பின் தாக்கம் மிகப் பெரியது. பலரும் இதை பயன்படுத்திக் கொண்டிருப்பதால், ‘அரட்டை’ செயலி அதை முற்றிலும் மாற்றுவது சவாலானது.
