இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற ஜுன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அன்றைய தினமே சென்னையில் அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.