ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், அதன் கேமரா அம்சங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் வர உள்ள இந்த மாடலில் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமராவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
தரமான தயாரிப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆப்பிள், இந்த முறை கேமரா லென்ஸ்களில் தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொண்டு, மேம்பட்ட ஸூம் மற்றும் புகைப்பட கையாள்திறனுடன் புதிய மென்பொருள்களையும் இணைக்கவுள்ளது.
ஐபோன் 16 மாடலுக்கு பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, இப்போது மக்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் இந்த நவீன மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. கேமரா தரம், தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் மொபைல் ஃபோட்டோகிராஃபிக்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, இந்த மாடலை மற்ற iPhone வரிசைகளில் இருந்து வேறுபடுத்தவுள்ளது.