விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் திருச்சுழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வரும் ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
திருநெல்வேலியில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி 5 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி மாநாடு முதன் முதலாக நடைபெற உள்ளது. அது குறித்து முதன்முதலாக அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆய்வுக்காக வந்துள்ளேன் என கூறினார்.
தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது.
சொத்துவரி மின்சார கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். நடுத்தர தொழில்கள் செய்பவர்கள், தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ்ஐ மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறதா என செய்தியாளர் கேட்டதற்கு, கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என கூறினார்.