முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.
அன்வர் ராஜாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையே அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.