Wednesday, December 17, 2025

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அதிமுக, எம்.எல்.ஏ வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News