Saturday, August 16, 2025
HTML tutorial

ஆபத்தாக மாறும் Antacid மருந்துகள்

உணவு உட்கொள்ளும் நேரங்களுக்கு இடையே சரியான இடைவெளி இல்லாமல் போகும் பட்சத்தில், உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு நேரக்கூடிய மிகவும் பொதுவான அசௌகரியம், அஜீரண கோளாறு.

வயிற்றில் இருக்கும் அமிலங்களின் சமநிலை பாதிக்கப்படும் போது, உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி நகரும் அமிலத்தால் நெஞ்செரிச்சல், வயிற்று பிரட்டல் மற்றும் உடல் இறுக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளது.

இவற்றை சரிசெய்ய பெரும்பாலான மக்கள், மருந்து கடைகளில் விற்கப்படும் antacidகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் கூட, தொடர்ந்து மற்றும் அதிக அளவில் உபயோகிக்கப்படும் போது, antacidகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அதிலும், Proton Pump Inhibitor வகையிலான antacidகளின் நீண்ட கால பயன்பாடு தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கில் துவங்கிஎலும்பு முறிவு, நிமோனியா, சிறுநீரக செயல்பாடு குறைவு போன்ற தீவிர எதிர்மறை விளைவுகளை வெளிப்படுத்துவதாக ஆய்வு அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், antacid மருந்து எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நபர்கள், இதய நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை அஜீரண கோளாறு என தவறாக புரிந்து கொள்வதால் உடல்நிலை வெகுவாக மோசமடைய வாய்ப்பு இருப்பதால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News