AI-யின் இன்னொரு பயங்கர முகம்! அடுத்த தலைமுறையின் மேல் இறங்கப்போகும் இடி! காத்திருக்கும் பேராபத்து!

செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், அதனால் உருவாகும் புதிய சவால்களில் ஒன்றாக AI Divide எனப்படும் “ஏஐ இடைவெளி” பிரச்சனை உருவாகி வருகிறது.

இணையம், மின்சார வசதிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அணுகுவதில் நிலவும் “டிஜிட்டல் இடைவெளி” போலவே, ஏஐ-யை அணுகுவதிலும் பயன்படுத்துவதிலும் உருவாகும் வேறுபாடே இது. அதாவது, சிலர் ஏஐயின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதுடன், சிலர் அதன் அடிப்படை அறிமுகத்துக்கே இன்னும் சென்றடையாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

பிரபல தொழில்நுட்ப விமர்சகர் கூறியதாவது, “ஏஐ இடைவெளியின் தீவிர விளைவாக ‘எழுதாத தலைமுறை’ உருவாகும் அபாயம் உள்ளது’ என்கிறார். அதாவது, எதிர்கால தலைமுறை சுயமாக எழுதும் திறனை இழந்து விடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள், குறிப்பாக தானாக எழுதித் தரும் சாப்ட்வேர்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், அதிகம் பயன்படுத்தப்படுவதால், மனிதர்கள் தங்கள் சிந்தனையையும், எழுத்துத் திறனையும் முற்றிலுமாக இழக்கக்கூடும் என கவலை தெரிவிக்கிறார்.

‘அடுத்த சில பத்தாண்டுகளில் எழுதத் தெரிந்தவர்கள் குறைந்து விடுவர்’ என Silicon Valley தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுவது இதற்கு சான்று. இது கல்வி அமைப்புகளுக்கும், மொழித் திறன்களுக்கும் புதிய சவாலாக உருவாகியுள்ளது.

எனவே, ஏஐ வளர்ச்சியுடன் கல்வி மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறையிலும் சமநிலையை காப்பது அவசியம். இல்லையெனில், அறிவாற்றல் மிக்கதாய் இருந்தாலும், எழுதத் தெரியாத தலைமுறை உருவாகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News