Wednesday, December 24, 2025

நெல்லை கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, கவின்குமார் கடந்த மாதம் 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார்.

காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார்.

இந்நிலையில் கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். புலன் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News