முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன் என கூறினார்.
இதையடுத்து பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி பேச முயற்சித்தபோது பிறகு பேசலாம் என கூறி நயினார் நாகேந்திரனை அண்ணாமலை அழைத்து சென்றார்.