பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து விலகும் அண்ணாமலை, பரபரப்பு விளக்கம்

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர், விருகம்பாக்கம், உட்பட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘என் தந்தையின் உடல்நலம் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என தெரியவில்லை. அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

இதன் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்’ என்றார்.

Related News

Latest News