எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று சொன்னவர் அண்ணாமலை – திருமாவளவன்

நெல்லையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல அளவிலான பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டியது NDA கூட்டணி தொண்டர்களின் பொறுப்பு என பேசினார்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது : தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்து கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை.

எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை என கூறியுள்ளார்.

Related News

Latest News