Sunday, April 20, 2025

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம்?

பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் உள்ளன.

Latest news