சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க அனைத்து உரிமையும் உண்டு. அமித்ஷாவை சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை.
டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது. அதிமுக உட்கட்சியை விவகாரத்தில் தலையிட வேண்டிய் அவசியம் பாஜகவுக்கு இல்லை.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவு கிடைத்தது பற்றி கூறியதாவது : மோசமான முதல்வராக இருந்தால் கூட அவருக்கு 43 சதவீதம் ஆதரவு கருத்து கணிப்பில் இருக்கும். ஆனால் அதைவிட மு.க.ஸ்டாலினுக்கு குறைவாகவே ஆதரவு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
யாரையும் கடந்த காலங்களில் தவறாக விமர்சித்ததில்லை. அவர்கள் சொன்ன கருத்துகளால் பதில் சொல்லி இருக்கிறேன். மாற்றி மாற்றி பேசுவது எனக்கு பழக்கம் கிடையாது. எனது கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.