கடந்த 23 தேதியன்று ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்து ஒன்றில் 43 பயணிகள் என மொத்தம் 46 பேருடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றது.
அப்போது சாலையின் முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததால், சிறிது நேரத்தில் மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது.
அதிகாலை என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தனர். அதில் 27 பேர் படுகாயங்களுடன் தப்பியுள்ளார்.
இந்த கோர தீ விபத்தில் சிக்கி 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆந்திராவில் 6 பேர், தெலங்கானாவில் 6 பேர் என தெரியவந்தது. மேலும் சிலர் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கர்னூல் ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூர் அருகே பூலுவப்பட்டி தோட்டத்து பாளையம் ஊரைச் சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகன் யுவன் சங்கர் ராஜ் (22) உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இவர் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றும் இவர் தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காததால் பண்டிகைக்கு பிறகு பெற்றோரை பார்க்க பேருந்தில் வரும் போது விபத்து நடந்துள்ளது.
