பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம். பா.ம.க. தலைமை அலுவலகம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது.
புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். அன்புமணியின் பெயருக்கு பின்னால் என் பெயரை போட கூடாது என ஏற்கனவே கூறிவிட்டேன்.
செயல்தலைவராக இருந்தும் நடைபயணத்திற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை. அதனால் அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும். அன்புமணி சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.