பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடைபெறும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார். எனது பேரை பயன்படுத்தக் கூடாது, ஓட்டு கேட்கும் கருவியை அன்புமணி வைத்தார், அன்புமணி வாயை திறந்தாலே பொய் கூறுவார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், கூறியதாவது : இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையில் அடிப்படையில் பாமக செயல்தலைவர் பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணியை நீக்குகிறேன் என்றார்.