திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் QR CODE அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.
யாராவது சில்லறை இல்லை என்றால் அக்கவுண்டில் போடு என ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை காட்டுகிறார். தான் 3 வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாகவும், ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதாகவும் கூறுகிறார்.