இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நதீம் கான், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு நடிகர்களின் வீட்டில் பணிபுரியும் 41 வயது பெண்ணுடன் நதீம் கானுக்கு 2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 வருடமாகத் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நடிகர் நதீம் கான் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பாலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
